முகம் பார்க்கிறேன்
முதல் பதிப்பிற்காக - என்
மூச்சியிலிருந்து வரும்
முதல் சுவாசம்
இது...
தமிழுக்கு நான் தரும்
சீதனம் மட்டும் அல்ல
காதலிக்கு நான் தரும்
நினைவு சின்னம்
என் காதலுக்காக
இதயத்திலிருந்து எடுத்து
உதிரத்தில் நனைத்து
உலரவிட்ட சில வரிகள் ...
மறுவாழ்வு கொடுக்க
மறுபடியும் தேடுகிறேன் - என்
காதல் இதயத்தில்
மடிந்து போனது தெரியாமல் ...
வரவேற்பு உரையில்
வாழ்த்து மடல் வாசித்தவன் நான்
வாசித்து விட்டு
விடை சொல்லாமல் போன
வாசகர்களும் உண்டு
வாசித்து விட்டு
"வளர்க" என்று வாழ்த்து சொன்னவர்களும் உண்டு
யாரை குறை சொல்வது
இப்போதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது
இனியாவது நல்ல பதில்
வாசர்களாகிய நீங்கள் சொல்வீர்கள் என்று
நம்பிக்கையுடன்
காதல் கவி
சார்லஸ்
No comments:
Post a Comment